​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உள்வட்டாரத்தில் ஏராளமானோருக்கு கொரோனா... தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக ரஷ்ய அதிபர் அறிவிப்பு

Published : Sep 16, 2021 1:31 PM

உள்வட்டாரத்தில் ஏராளமானோருக்கு கொரோனா... தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக ரஷ்ய அதிபர் அறிவிப்பு

Sep 16, 2021 1:31 PM

தனது  உள்வட்டாரத்தில் பல பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், அதிபர் புதினின் உள்வட்டாரத்தில் கொரோனா  பரவியதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாகவும், கொரோனா பரிசோதனை செய்துகொண்டதாகவும்,புதின் பூரண நலத்துடன் இருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், காணொளி மூலமாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய புதின், ஒன்று இரண்டு பேர் என்று இல்லாமல் தனது உள்வட்டாரத்தில் ஏராளமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக தெரிவித்தார்.