​​ ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமாரின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமாரின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து


ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமாரின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து

Mar 03, 2018 3:42 PM

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் சிக்கிய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாரின் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் சூதாட்டப் புகார் குறித்து விசாரணை நடத்திய கியூ பிரிவு அதிகாரி சம்பத் குமார், வழக்கில் இருந்து சிலரை தப்ப வைக்க லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டபோது கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சம்பத்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், ஐ.பி.எல். சூதாட்ட வழக்கை விசாரித்து வரும் விசாரணைக் குழுவானது சம்பத் குமார் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது. உரிய அனுமதி இன்றி ஊடகங்கள் மத்தியில் அவர் பேசியது தவறு என்பதை மட்டும் அந்தக் குழு குறிப்பிட்டுள்ளது. இதனால் சம்பத் குமாரின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.