​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

Published : Mar 03, 2018 1:23 PM

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

Mar 03, 2018 1:23 PM

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் நம்பியூரில் 4 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பிலான சாலைப் பணிகளை, அவர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக, கூடுதலாக 515 அரசுத் தேர்வு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.