​​ இந்திய வீராங்கனை நவ்ஜோத் கவுர் தங்கம் வென்று சாதனை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்திய வீராங்கனை நவ்ஜோத் கவுர் தங்கம் வென்று சாதனை

இந்திய வீராங்கனை நவ்ஜோத் கவுர் தங்கம் வென்று சாதனை

Mar 03, 2018 12:55 PM

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். கிர்கிஸ்தானில் ((கிர்கிஸ்தான்)) உள்ள பிஷ்கெக் ((Bishkek)) நகரில் சீனியர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடந்த பெண்களுக்கான பிரிஸ்டைல் 65 கிலோ எடைப்பிரிவில், இந்திய வீராங்கனை நவ்ஜத் கவுர் ((Navjot Kaur)), ஜப்பான் வீராங்கனையை எதிர்கொண்டார்.

இதில் ஒன்பதுக்கு ஒன்று என்ற கணக்கில் ஜப்பான் வீராங்கனை வீழ்த்தி நவ்ஜோத் கவுர் தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றார். இதன்மூலம், சீனியர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் வரலாற்றில், தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் நவ்ஜோத் கவுர் படைத்தார்.