​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உத்தரப்பிரதேச சிறைகளில் உள்ள 459 கைதிகளுக்கு 'எய்ட்ஸ்'

Published : Jun 14, 2018 12:40 AM

உத்தரப்பிரதேச சிறைகளில் உள்ள 459 கைதிகளுக்கு 'எய்ட்ஸ்'

Jun 14, 2018 12:40 AM

உத்தர பிரதேச சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் 459 பேருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது தெரியவந்துள்ளது.

உத்திரப்பிரதேச சிறைத்துறை நிர்வாகம், எய்ட்ஸ் கட்டுப்பாடு வாரியத்துடன் இணைந்து கைதிகளுக்கு HIV ரத்தப் பரிசோதனை முகாமை கடந்த மாதம் தொடங்கியது. 78 ஆயிரத்து 739 கைதிகளுக்கு நடைபெற்ற HIV பரிசோதனையில், 459 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. லக்னோவில் உள்ள சிறையில் மிக அதிகமாக 49 கைதிகள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள கைதிகளில், 11 ஆயிரத்து 166 கைதிகள் எய்ட்ஸ் பரிசோதனைக்கு மறுப்புத் தெரிவித்து வருவதாக, உத்திரப்பிரதேச சிறைத்துறை கூறியுள்ளது.