​​ காதலியை தாக்கிய வழக்கில் இந்தி நடிகர் அர்மான் கோலி கைது
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காதலியை தாக்கிய வழக்கில் இந்தி நடிகர் அர்மான் கோலி கைது


காதலியை தாக்கிய வழக்கில் இந்தி நடிகர் அர்மான் கோலி கைது

Jun 13, 2018 4:03 PM

காதலியை தாக்கிய வழக்கில், இந்தி நடிகர் அர்மான் கோலியை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்தியில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகர் அர்மான் கோலி, ஆடை வடிவமைப்பாளரான நீரு ரன்தாவா என்ற பெண்ணுடன், திருமணம் செய்து கொள்ளாமலே ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அர்மான் கோலி தன்னை தலைமுடியைப் பிடித்து இழுத்து தாக்கியதாக மும்பை போலீஸாரிடம் நீரு கடந்த வாரத்தில் புகார் அளித்தார். பணம் தொடர்பான பிரச்சனையில் இருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், அவர் மீது வழக்குப் பதிவு செய்த மும்பை போலீசார், நீண்ட விசாரணைக்குப் பிறகு அர்மான் கோலியை கைது செய்துள்ளனர்.