​​ தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி பங்கேற்பாளர் மீது மனைவி புகார்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி பங்கேற்பாளர் மீது மனைவி புகார்


தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி பங்கேற்பாளர் மீது மனைவி புகார்

Jun 10, 2018 3:37 PM

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி பங்கேற்பாளர் ஒருவர், முதல் திருமணத்தை மறைத்து, இரண்டாவது திருமணம் செய்ய முயற்சிப்பதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர், நவீன். தனியார்  தொலைக்காட்சியில் பல குரல் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ் பெற்ற இவர், கடந்த 2016ஆம் ஆண்டில் திவ்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து, அதை அரக்கோணம் பதிவுத்துறை அலுவலகத்தில் பதிவும் செய்துள்ளார்.image

இந்நிலையில், மலேசியாவைச் சேர்ந்த கிருஷ்ணகுமாரியை இன்று திருமணம் செய்ய இருப்பதாக, நேற்று முதல் மனைவியான திவ்யா, காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், தங்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றதற்கான ஆவணங்களையும் காவல் நிலையத்தில் அவர் சமர்ப்பித்துள்ளார்.image இதையடுத்து, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆடம்பர விடுதியில் நேற்று நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியை தடுத்து நிறுத்திய போலீசார்,  நவீனை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.image