​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எல்லை வழியாக ஊடுருவ முயன்ற 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Published : Jun 10, 2018 3:00 PM

எல்லை வழியாக ஊடுருவ முயன்ற 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Jun 10, 2018 3:00 PM

எல்லை வழியாக ஊடுருவ முயன்ற 6 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள கெரான் என்ற இடத்தில் சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் இருப்பதை இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினர் கண்டறிந்தனர். இதையடுத்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது.

அப்போது தீவிரவாதிகள் சிலர் ஊடுருவ முயற்சித்ததைக் கண்டு வீரர்கள் தாக்குதல் நடத்தினர். அதிகாலை நடைபெற்ற இந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

மேலும் சில தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வந்த நிலையில், எல்லையில் பதுங்கி இருந்த மேலும் இரு தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். அங்கு தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.