​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதுச்சேரி கூட்டுறவு வங்கியில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளை - கைவரிசை காட்டிய கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

Published : Jun 10, 2018 2:13 PM

புதுச்சேரி கூட்டுறவு வங்கியில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளை - கைவரிசை காட்டிய கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

Jun 10, 2018 2:13 PM

புதுச்சேரி மாநிலம் திருபுவனை அருகே கூட்டுறவு வங்கியில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருபுவனையை அடுத்த மதகடிப்பட்டில் திருபுவனை விவசாயிகள் கூட்டுறவு சங்க வங்கி உள்ளது. இங்கு அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் வைப்புத்தொகை செலுத்தியுள்ளனர். மேலும் தங்களது நகைகளை அடமானமாக வைத்து நகைக்கடனும் பெற்றுள்ளனர். நேற்று வங்கிக்கு விடுமுறை என்பதால் வங்கி பூட்டப்பட்டிருந்தது. வங்கிக்கு இரவில் காவலாளி இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நள்ளிரவில் வங்கியின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் லாக்கரில் இருந்த 3 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் நகையினை கொள்ளையடித்துச் சென்றனர். காலையில் வங்கியின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அருகிலிருந்தோர் போலீசாருக்குத் தகவல் அளித்தனர்.

வங்கியில் கொள்ளையடித்த நபர்கள், அருகிலுள்ள மளிகைக்கடை, பல்பொருள் அங்காடி உள்ளிட்ட 5 இடங்களிலும் கைவரிசையை காட்டியது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரித்த போலீசார், கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் கைவரிசை காட்டிய கும்பல் கொள்ளையில் ஈடுபட்டதா அல்லது வங்கி ஊழியர்களே கொள்ளையில் ஈடுபட்டனரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், வங்கியில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகியுள்ளதா என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.