​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் கட்டுக்கட்டாக ஆவணங்கள் பறிமுதல்

Published : Jun 10, 2018 12:22 PM

சென்னை ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் கட்டுக்கட்டாக ஆவணங்கள் பறிமுதல்

Jun 10, 2018 12:22 PM

சென்னையில் ஆயத்த ஆடை நிறுவனங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் கட்டுக்கட்டாக ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னையைச் சேர்ந்த காந்தி குழுமம் டெல்லி, மும்பை, கொல்கத்தா, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து துணிகளை வாங்கி ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்து வருகின்றது. பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் உள்ள காந்தி குழுமத்தின் ஆயத்த ஆடைக் கிடங்கு, வேப்பேரியில் உள்ள நிறுவன பங்குதாரர்களில் ஒருவரான மருத்துவர் பிரகாஷ் சந்த் ஜெயின் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 3 நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள மேத்தா ஜுவல்லரி மற்றும் தியாகராய நகரில் உள்ள கடைகள் என 23 இடங்களில வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்த சோதனைகளில் கணக்கில் வராத 7 கோடி ரூபாய் பணம் மற்றும் 15 கிலோ தங்கம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

17 இடங்களில் சோதனை நிறைவடைந்துவிட்டபோதும், 6 இடங்களில் இன்னும் சோதனை நீடித்து வருகிறது. இந்நிலையில், கட்டுக்கட்டாக ஆவணங்கள் மற்றும் பென்டிரைவ் உள்ளிட்டவைகளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்நிறுவனத்தைச் சேர்ந்த 2 பேரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.