​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரெஞ்ச் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் சிமோனா ஹாலப் சாம்பியன்

Published : Jun 10, 2018 11:18 AM

பிரெஞ்ச் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் சிமோனா ஹாலப் சாம்பியன்

Jun 10, 2018 11:18 AM

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலப் (Simona Halep) சாம்பியன் பட்டம் வென்றார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிசில் நடைபெற்று வருகிறது. மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்சுடன் (Sloane Stephans), தர வரிசையில் முதலிடத்தில் உள்ள ஹாலப் மோதினார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 3-6 என்ற கணக்கில் ஸ்லோன் கைப்பற்றினார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட ஹாலப் 6-4, 6-1 என அடுத்தடுத்த செட்களை வென்று கோப்பையைக் கைப்பற்றினார்.

கடந்த 40 ஆண்டுகளில் ருமேனிய வீராங்கனை ஒருவர், கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்வது இதுவே முதன்முறையாகும். ஹாலப் ஏற்கனவே மூன்று முறை பிரெஞ்ச் ஓபன் இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.