​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மக்களின் உயிரையும், வாழ்வாதாரத்தையும் காக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Published : Apr 20, 2021 7:58 AM

மக்களின் உயிரையும், வாழ்வாதாரத்தையும் காக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Apr 20, 2021 7:58 AM

மக்களின் உயிரையும், வாழ்வாதாரத்தையும் காக்கும் பணியில் அரசு தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், கொரோனா பெருந்தொற்று நிலவரம் மற்றும் அதனை கையாள்வது தொடர்பாக பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வர்த்தக சபை தலைவர்களின் கருத்துகளை கேட்டறிந்துள்ளதாக தெரிவித்தார். 

கொரோனா இரண்டாவது அலை பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை எதிர்கொள்வது குறித்தும் அவர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும்,  கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நிலைகளில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவர்களிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.