​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மகாராஷ்ட்ராவில் மளிகை,காய்கறி, ரேசன் கடைகள் 4 மணி நேரம் மட்டும் திறக்க அனுமதி

Published : Apr 20, 2021 7:37 AM

மகாராஷ்ட்ராவில் மளிகை,காய்கறி, ரேசன் கடைகள் 4 மணி நேரம் மட்டும் திறக்க அனுமதி

Apr 20, 2021 7:37 AM

மகாராஷ்ட்ராவில் முழு ஊரடங்கு அமலில் உள்ள போதும் காய்கறி , மளிகைப் பொருள் மற்றும் ரேசன் கடைகள் காலை 7 மணி முதல் முற்பகல் 11 மணி வரை திறந்திருக்கலாம் என்று சிவசேனா அரசு அறிவித்துள்ளது.

மும்பையில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகளவில் உள்ளது. நேற்று ஒரே நாளில் 58 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். 351 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

ஆயினும் மளிகைப் பொருட்கள் , காய்கறிகள், ரேசன் கடைகளை நான்கு மணி நேரம் திறக்க மாநில அரசு அனுமதியளித்துள்ளது.

மக்கள் பொருள் வாங்க வெளியில் வரும் நேரத்தைக் குறைத்து வீட்டிற்குள் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.