​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரூ 1.28 கோடி சீட்டிங்... சிட்டி யூனியன் வங்கி மேலாளர் அதிரடி கைது..! அரசியல் பிரமுகர் மகன் தப்பினார்

Published : Apr 19, 2021 10:01 PM



ரூ 1.28 கோடி சீட்டிங்... சிட்டி யூனியன் வங்கி மேலாளர் அதிரடி கைது..! அரசியல் பிரமுகர் மகன் தப்பினார்

Apr 19, 2021 10:01 PM

அரியலூர் மாவட்டத்தில் வங்கி வாடிக்கையாளரின் கையெழுத்தின்றி 1கோடியே 28 லட்சம் ரூபாயை அரசியல் பிரமுகர் மகனுடன் சேர்ந்து கையாடல் செய்த புகாருக்குள்ளான சிட்டியூனியன் வங்கி மேலாளர் சென்னையில் வைத்து போலீஸ் பிடியில் சிக்கினார்

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஸ்ணத்தை சேர்ந்த ஹார்ட்வேர்ஸ் நிறுவன உரிமையாளரான மருதை என்பவர், தன்னுடைய தொழில் முதலீட்டிற்காக அரியலூர் மாவட்டம் விளந்தை சிட்டியூனியன் வங்கியில் 3 வங்கி கணக்குகள் மூலம் 2 கோடியே 10 லட்சம் ரூபாயை கடனாக பெற்றிருந்தார்.

அவரது வங்கி கணக்குகளில் இருந்து அவரது கையெழுத்து மற்றும் ஒப்புதலின்றி வங்கி மேலாளர் சூரிய நாராயணன் என்பவர் திமுக பிரமுகர் மகன் வீரவேல் என்பவருக்கு 1கோடியே 28 லட்சம் ரூபாயை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக 2019 ஆம் ஆண்டு மருதை புகார் அளித்தார். இதன் தொடர்ச்சியாக வங்கி மேலாளர் சூரிய நாராயணன் சஸ்பெண்டு செய்யப்பட்டார். ஆனால் போலீசார் வழக்கை கிடப்பில் போட்டனர்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் வங்கி மேலாளர் சூரிய நாராயணன், வீரவேல் ஆகிய இருவர் மீதும் நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த புகார் தொடர்பான இறுதி கட்ட விசாரணையின் போது அரியலூர் எஸ்.பி அலுவலகத்தில் இருந்து மீண்டும் விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்ட நிலையில் இருவரும் தலைமறைவானதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் மருதை அளித்த புகார் தொடர்பான விசாரணையில் இருவருக்கும் எதிராக போதுமான ஆதாரங்கள் இருந்ததால் அவர்கள் இருவரையும் காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் வங்கி மேலாளர் சூரிய நாராயணன் , சென்னையில் வைத்து சிக்கியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ராயப்பேட்டையில் வைத்து சூரியநாராயணனை சாதாரண உடையில் வந்த போலீசார் சுற்றி வளைத்து பிடித்துச்சென்ற போது அவருடன் இருந்த வழக்கறிஞர், வங்கி மேலாளரை சிலர் கடத்திச்செல்வதாக புகார் தெரிவித்தார்.

அதே நேரத்தில் இதே புகாரில் தொடர்புடைய அரசியல் பிரமுகர் வீரவேல் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.