​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
”சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கும்” - மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

Published : Apr 19, 2021 8:32 PM

”சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கும்” - மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

Apr 19, 2021 8:32 PM

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இரவு 9 மணியோடு நிறுத்தப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

வழக்கமாக அதிகாலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும். கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் செவ்வாய்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் இரவு 9 மணியோடு சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் சேவை இல்லை என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் ரயிலில் பயணம் செய்யும் போது பயணிகள் கட்டாயம் முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும், மெட்ரோ நிலையங்களில் பயணிகளுக்கு உடல்வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.