​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாளை முதல் புதுச்சேரியிலும் இரவு நேர ஊரடங்கு அமல்..!

Published : Apr 19, 2021 6:51 PM

நாளை முதல் புதுச்சேரியிலும் இரவு நேர ஊரடங்கு அமல்..!

Apr 19, 2021 6:51 PM

புதுச்சேரியிலும் 20 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள கொரோனா தடுப்பு ஊசி மையத்தை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 20 ஆம் தேதி முதல் ஹோட்டல்களில் இரவு எட்டு மணிவரை மட்டும் உட்கார்ந்து சாப்பிடலாம் என்றும் அதன் பின் 10 மணி வரை பார்சலுக்கு மட்டுமே அனுமதி என்றும் கூறினார்.

புதுச்சேரி கடற்கரை சாலையில் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செல்ல அனுமதி என்றும் கூறிய அவர், தமிழகத்தை போன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஓரிரு நாட்களில் முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றார்.