​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணி தொடர்ந்து 2-வது வெற்றி..! 13 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வென்றது

Published : Apr 18, 2021 6:00 AM

ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணி தொடர்ந்து 2-வது வெற்றி..! 13 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வென்றது

Apr 18, 2021 6:00 AM

.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 13 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் குயிண்டன் டி காக் 40 ரன்கள் எடுத்தார்.

இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் வார்னர் 36 ரன்களும், ஜானி பேர்ஸ்டோவ் 43 ரன்கள் குவித்து நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்த போதிலும் தொடர்ந்து வந்த வீரர்கள் சொதப்பினர். 19 புள்ளி 4 ஓவர்கள் முடிவில் அந்த அணி 137 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.