​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாடு முழுவதும் இதுவரை 12.25 கோடி பேருக்கு தடுப்பூசி..! சுமார் 60 சதவீத டோஸ்கள் வெறும் 8 மாநிலங்களில் மட்டுமே போடப்பட்டது

Published : Apr 18, 2021 5:56 AM

நாடு முழுவதும் இதுவரை 12.25 கோடி பேருக்கு தடுப்பூசி..! சுமார் 60 சதவீத டோஸ்கள் வெறும் 8 மாநிலங்களில் மட்டுமே போடப்பட்டது

Apr 18, 2021 5:56 AM

நாடு முழுவதும் இதுவரை சுமார் 12 கோடியே 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகள் இந்தியாவில் மிகவும் வேகமாக நடந்து வருகிறது.இதன் பலனாக இந்தியா முழுவதும் போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 12 கோடியை தாண்டியது.

நேற்று இரவு 8 மணி நிலவரப்படி 12 கோடியே 25 லட்சம் டோஸ்கள் போடப்பட்டுள்ளன. குறிப்பாக 24 மணி நேரத்தில் மட்டுமே 30 லட்சத்துக்கும் அதிகமான டோஸ்கள் போடப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 60 சதவீத டோஸ்கள் வெறும் 8 மாநிலங்களில் மட்டுமே போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.