​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
”தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு” - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Published : Mar 04, 2021 6:33 PM

”தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு” - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Mar 04, 2021 6:33 PM

மிழகத்தில் வருகிற 6 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5 ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என்றும், 6 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அந்த மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு நாட்களுக்கு வானம் தெளிவாக இருக்கும் என்றும், நகரின் அதிகபட்ச வெப்பநிலை 93.2 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 73.4 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.