​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் - சசிகலா அறிவிப்பு

Published : Mar 04, 2021 7:31 AM

அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் - சசிகலா அறிவிப்பு

Mar 04, 2021 7:31 AM

அரசியலைவிட்டு ஒதுங்கியிருக்கப் போவதாக சசிகலா தெரிவித்துள்ளார். தான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

சசிகலா விடுத்துள்ள அறிக்கையில், இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேலாக ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளான தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும் எனவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

பொது எதிரியை ஆட்சியில் அமரவிடாமல் தடுத்து விவேகமாக இருக்கவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள சசிகலா, தன் மீது அன்பும், அக்கறையும் காட்டிய தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்கோ ஆசைப்பட்டதில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், தான் அரசியலை விட்டு ஒதுங்கி ஜெயலலிதாவின் ஆட்சி அமைய பிரார்த்தனை செய்வதாகவும் சசிகலா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.