மதுரையில், அமமுக பிரமுகரின் சகோதரருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையில், கணக்கில் வராத 3 கோடி ரூபாய் பணம் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மதுரை அமமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மகேந்திரனின் சகோதரர் வெற்றி என்பவருக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெற்றி சினிமாஸ் என்ற பெயரில் திரையரங்குகள் உள்ளன.
இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலுக்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில், மதுரை மற்றும் தேனியில் அவருக்கு சொந்தமான திரையரங்குகள், கட்டுமான நிறுவனம் உள்ளிட்ட 15 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.