​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுரையில் அமமுக நிர்வாகியின் தம்பிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

Published : Mar 03, 2021 4:16 PM

மதுரையில் அமமுக நிர்வாகியின் தம்பிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

Mar 03, 2021 4:16 PM

மமுக கட்சியின் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் மகேந்திரனின் சகோதரர் வெற்றி என்பவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அவருக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெற்றி சினிமாஸ் என்ற பெயரில் திரையரங்குகள் உள்ளன.

இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலுக்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில், மதுரை மற்றும் தேனியில் அவருக்கு சொந்தமான திரையரங்கு, கட்டுமான நிறுவனம் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது.