​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கை குலுக்கிச் சென்றுவிட்டதால் கூட்டணி அமைந்துவிட்டதாக அர்த்தம் இல்லை - கமல்

Published : Mar 03, 2021 3:17 PM

கை குலுக்கிச் சென்றுவிட்டதால் கூட்டணி அமைந்துவிட்டதாக அர்த்தம் இல்லை - கமல்

Mar 03, 2021 3:17 PM

மக்கள் நீதிமய்யத்துடன் கூட்டணி அமைத்து சமத்துவ மக்கள் கட்சி தேர்தலை சந்திக்கும் என்று சரத்குமார் தெரிவித்திருந்த நிலையில், கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கமல்ஹசன் கூறியுள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல், சமக, இந்திய ஜனநாயக கட்சிகளுடன் கை குலுக்கி இருப்பதாக தெரிவித்தார்.

முன்னதாக பேசிய கமல்ஹாசன், இளைஞர்கள் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தப்படும் என்றும், வட்டியில்லா கடனில் பேட்டரி ஸ்கூட்டர் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

உடற்பயிற்சி ஊக்குவிப்பு, உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வளாகம் அமைத்தல் உள்ளிட்ட விளையாட்டு மேம்பாட்டுக்கான 7 திட்டங்கள் மற்றும் மகளிர் வங்கி உள்பட பெண்கள் நல்வாழ்வுக்கான 7 செயல்திட்டங்களையும் கமல் அறிவித்தார்.