பினாமி சட்டத்தின் கீழ் முடக்கப்பட்ட பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களுக்கான வருமானம் எங்கிருந்து வந்தது? என்பது தொடர்பான விளக்கத்தை முறையாக அளிக்குமாறு, வி.கே.சசிகலாவுக்கு, அமலாக்கத்துறை, மீண்டும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ், 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள, கொடநாடு எஸ்டேட் பங்களா, சிறுதாவூர் பங்களா முடக்கப்பட்டன. இவ்வாறு, பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பான சொத்துக்களை வாங்கியதற்கு, வருமானம் எப்படி வரப்பெற்றது என்பது தொடர்பாக, முழுமையான விளக்கம் அளிக்குமாறு, சசிகலாவுக்கு, அமலாக்கத்துறை மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.