​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டெல்லி வன்முறை தொடர்பாக 22 வழக்குகள் பதிந்து 200 பேரைப் பிடித்துள்ளதாக டெல்லி காவல்துறை தகவல்

Published : Jan 27, 2021 3:03 PM

டெல்லி வன்முறை தொடர்பாக 22 வழக்குகள் பதிந்து 200 பேரைப் பிடித்துள்ளதாக டெல்லி காவல்துறை தகவல்

Jan 27, 2021 3:03 PM

டெல்லி வன்முறையில் முந்நூற்றுக்கு மேற்பட்ட காவலர்கள் காயமடைந்ததாகவும், வன்முறை தொடர்பாக 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

குடியரசு நாளில் டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தியபோது வன்முறை மூண்டது. முன்கூட்டியே பேரணியைத் தொடங்கியதாலும், அனுமதித்ததற்கு மாறான பாதையில் டிராக்டர்கள் சென்றதாலும் காவல்துறையினர் தடுத்ததாகவும், விவசாயிகள் டிராக்டர்களால் மோதித் தடுப்புகளை உடைத்துக்கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

தடுத்த காவலர்கள் மீது விவசாயிகள் சிலர் வாளால் வெட்டியதாகவும், கொடி கட்டிய கம்பால் தாக்கியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. வன்முறையில் முந்நூற்றுக்கு மேற்பட்ட காவலர்கள் காயமடைந்ததாகவும், இது தொடர்பாக 22 வழக்குகள் பதிவு செய்து 200 பேரைக் கைது செய்துள்ளதாகவும் டெல்லிக் காவல்துறை தெரிவித்துள்ளது.