​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கல்வான் மோதலில் வீரமரணமடைந்த சந்தோஷ் பாபுக்கு பரம்வீர் சக்ரா விருது கொடுக்க வேண்டும் -சந்தோஷ்பாபுவின் தந்தை

Published : Jan 27, 2021 12:59 PM

கல்வான் மோதலில் வீரமரணமடைந்த சந்தோஷ் பாபுக்கு பரம்வீர் சக்ரா விருது கொடுக்க வேண்டும் -சந்தோஷ்பாபுவின் தந்தை

Jan 27, 2021 12:59 PM

சீனப் படையினருடனான மோதலில் வீரமரணமடைந்த கர்னல் சந்தோஷ் பாபுக்குப் பரம்வீர் சக்ரா விருது வழங்கியிருக்க வேண்டும் என அவரின் தந்தை தெரிவித்துள்ளார்.

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு ஜூன் 15ஆம் நாள் இந்தியப் படையினருக்கும் சீனப்படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் இந்தியப் படையில் கர்னல் சந்தோஷ்பாபு உட்பட 20 பேரும், சீனப் படையில் 43 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில் சந்தோஷ் பாபுக்கு ராணுவத்தில் இரண்டாவது உயரிய விருதான மகாவீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவரின் தந்தை உபேந்திரா, தன் மகன் வெறுங்கைகளால் எதிரிப் படையினரைத் தாக்கிக் கொன்று சீனாவை விட இந்தியா மேலானது வலிமையானது எனமெய்ப்பித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.