​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
செங்கோட்டையில் நிசான் சாகிப் கொடியை ஏற்றியதை ஒப்புக்கொண்டார் நடிகர் தீப் சித்து

Published : Jan 27, 2021 12:34 PM

செங்கோட்டையில் நிசான் சாகிப் கொடியை ஏற்றியதை ஒப்புக்கொண்டார் நடிகர் தீப் சித்து

Jan 27, 2021 12:34 PM

டெல்லி செங்கோட்டையில் நிசான் சாகிப் கொடியை ஏற்றியதை நடிகர் தீப் சித்து ஒப்புக்கொண்டுள்ளார்.

டெல்லியில் நேற்று டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் செங்கோட்டையை முற்றுகையிட்டனர்.

அப்போது ஒருவர் கோட்டையில் உள்ள கொடிக்கம்பத்தின் மீது ஏறிச் சீக்கியர்களின் நிசான் சாகிப் கொடியை அதில் ஏற்றிய காட்சி தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களில் வெளியானது.

இந்தக் கொடியை ஏற்றியது நடிகர் தீப் சித்து எனத் தெரியவந்தது. இந்நிலையில் நிசான் சாகிப் கொடியை ஏற்றியதை தீப் சித்து ஒப்புக் கொண்டுள்ளார்.