10, 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு வினா வங்கி தயாரிக்கும் பணியில் பள்ளிக்கல்வித்துறை தீவிரம்
Published : Jan 24, 2021 11:47 AM
10, 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு வினா வங்கி தயாரிக்கும் பணியில் பள்ளிக்கல்வித்துறை தீவிரம்
Jan 24, 2021 11:47 AM
10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் வினா வங்கி தயாரிக்கும் பணியில் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டுள்ளது.
10, மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 40 சதவீதம் வரையிலான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படும் முக்கியமான கேள்விகளை எளிமையாக தெரிந்து கொண்டு படிக்கும் வகையில், வினா வங்கி தயாரிக்கும் பணியில் பள்ளிக்கல்வி துறை ஈடுபட்டுள்ளது.
பல்வேறு பள்ளிகளில் இருந்து வந்துள்ள பாட வாரியாக நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள் இந்த வினா வங்கியை தயாரித்து வருகின்றனர். 200 கேள்விகள் அடங்கிய வினாவங்கி உருவாக்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.