கோயம்புத்தூரில் பரப்புரையை முடித்துக் கொண்டு திருப்பூருக்குச் சென்ற ராகுல் காந்தி, கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில், தமக்கு வரவேற்பு அளித்த படுகர் இன பெண்களுடன் இணைந்து நடனமாடினார்.
திருப்பூர் ரயில் நிலையம் பகுதியில், கொடிகாத்த குமரன் என்றழைக்கப்படும் திருப்பூர் குமரனின் நினைவிடத்திற்கு வந்த ராகுல் காந்தி, குமரனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அனுப்பர்பாளையம் அருகே, பேக்கரியுடன் கூடிய டீக்கடைக்கு, கட்சி நிர்வாகிகளுடன் சென்று அமர்ந்து, ராகுல் காந்தி தேநீர் அருந்தினார்.