அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர் குழுவினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 29-ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.
மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு நிலவரம், எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளை கேட்டறிவதோடு, ஊரடங்கு தளர்வுகளை மேலும் அதிகரிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
மேலும், கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், மக்களிடையே அது குறித்த விழிப்புணர்வு மற்றும் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை, உருமாறிய கொரோனா வைரசின் தாக்கம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் கேட்டறிகிறார்.
இந்த ஆலோசனைக்கு பிறகு பிப்ரவரி மாதத்திற்கான ஊரடங்கு தளர்வுகள், கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.