​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை நாளை அறிமுகம் செய்கிறது இந்திய தேர்தல் ஆணையம்..!

Published : Jan 24, 2021 6:49 AM

மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை நாளை அறிமுகம் செய்கிறது இந்திய தேர்தல் ஆணையம்..!

Jan 24, 2021 6:49 AM

மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் கமிஷன் தேசிய வாக்காளர் தினமான நாளை அறிமுகம் செய்கிறது.

வாக்காளர் பட்டியலில் இடம் பெற புதிதாக விண்ணப்பித்த வாக்காளர்களுக்கு இது கிடைக்கும். அவர்கள் தங்களது செல்போன் எண்ணை விண்ணப்பத்தில் பதிவு செய்து இருக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்று உள்ள, செல்போன் எண்ணை பதிவு செய்த பழைய வாக்காளர்களுக்கு பிப்ரவரி 1-ந் தேதி முதல் மின்னணு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.

இந்த மின்னணு அட்டையில் வாக்காளரின் பெயர், வரிசை எண், பாகம் எண், புகைப்படம் இடம் பெற்றிருக்கும் என்றும், ‘கியூ ஆர் கோடு’ பயன்பாட்டை கொண்டதாக அந்த அட்டை இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.