​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இராமநாதபுரம் மாவட்ட 4 மீனவர்களின் உடல்கள் அவரவர் ஊரில் நல்லடக்கம்

Published : Jan 23, 2021 9:22 PM

இராமநாதபுரம் மாவட்ட 4 மீனவர்களின் உடல்கள் அவரவர் ஊரில் நல்லடக்கம்

Jan 23, 2021 9:22 PM

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட, தமிழக மீனவர்கள் நால்வரின் உடல்கள், அவரவர் சொந்த ஊரில், அடக்கம் செய்யப்பட்டன.

கோட்டைப்பட்டினத்தில் இருந்து, சில தினங்களுக்கு முன்பு, மீன்பிடிக்கச் சென்றபோது, நடுக்கடலில் இலங்கை கடற்படை தாக்குதலுக்கு இலக்காகி, நால்வரும் உயிரிழந்தனர். மத்திய, மாநில அரசுகளின் கடும் கண்டனத்தை தொடர்ந்து, சனிக்கிழமை முற்பகலில், நடுக்கடலில் வைத்து, இந்திய கடலோர காவல் படையினரிடம், 4 தமிழக மீனவர்களின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன.

பின்னர், கோட்டைப்பட்டினம் துறைமுகத்திற்கு எடுத்து வரப்பட்டு, அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், இராமநாதபுரம் மாவட்டத்திற்கு எடுத்துவரப்பட்ட நான்கு மீனவர்களின் உடல்களுக்கு, ஆட்சியர், எஸ்.பி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து, 4 மீனவர்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன. முன்னதாக, தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் மெசியாவின் உடல் அடக்கம் தொடர்பாக நடைபெற்ற மறியலால், இசிஆர் சாலையில், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.