​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது ராமநாதபுரம்

Published : Jan 23, 2021 8:30 PM

கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது ராமநாதபுரம்

Jan 23, 2021 8:30 PM

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக,586 பேருக்கு  கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 673 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  சென்னை மற்றும் திருநெல்வேலியில் தலா ஒருவர் வீதம் 2  பேர் மட்டுமே ஒரே நாளில் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் புதிதாக 153  பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 17  மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் பதிவாகியுள்ளதாக கூறியுள்ள தமிழக சுகாதாரத்துறை, ராமநாதபுரம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறி இருப்பதாக தெரிவித்துள்ளது.