​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாம்பன் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகில் தீ விபத்து

Published : Jan 23, 2021 10:49 AM

பாம்பன் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகில் தீ விபத்து

Jan 23, 2021 10:49 AM

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

அதிகாலை 5 மணி அளவில் இஸ்ரேல் பாக்கியம் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அருகில் இருந்த மீனவர்கள் தீயை அணைக்கு முயன்றனர்.

இருப்பினும் தீ மளமளவென பரவியதில் படகில் இருந்த மீன் பிடி உபகரணங்கள் எரிந்து சேதமானது. படகில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.