​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜெயலலிதாவின் வேதா இல்லம் மக்கள் பார்வைக்கு திறக்கப்படுகிறது - அமைச்சர் பாண்டியராஜன்

Published : Jan 22, 2021 4:10 PM

ஜெயலலிதாவின் வேதா இல்லம் மக்கள் பார்வைக்கு திறக்கப்படுகிறது - அமைச்சர் பாண்டியராஜன்

Jan 22, 2021 4:10 PM

சென்னை போயஸ் கார்டனில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம், விரைவில் பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்பட உள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பை, முதலமைச்சர் வெளியிடுவார் என்றும், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில், மிகப்பெரிய புத்தக விற்பனை அரங்கம் திறப்பு நிகழ்வில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். ஜெயலலிதா சேகரித்து வைத்திருந்த 15 ஆயிரம் புத்தகங்களும் காட்சிப்படுத்தப்படும் என்றார்.