​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வீட்டில் யாரும் இல்லாததால் பட்டப்பகலில் வீடு புகுந்து ரூ.35 லட்சம் மதிப்பிலான 100 சவரன் நகை திருட்டு

Published : Jan 22, 2021 3:41 PM

வீட்டில் யாரும் இல்லாததால் பட்டப்பகலில் வீடு புகுந்து ரூ.35 லட்சம் மதிப்பிலான 100 சவரன் நகை திருட்டு

Jan 22, 2021 3:41 PM

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து, பட்டப்பகலில் சுமார் 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான 100 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த கார்மேகம் என்பவரின் 4 மகன்களும் வெளிநாடு மற்றும் வெளியூர்களில் இருந்து பொங்கல் கொண்டாடுவதற்காக குடும்பத்துடன்சொந்த ஊர் வந்திருந்தனர்.

பண்டிகை முடிந்ததும் ஒவ்வொருவரும் வெவ்வேறு இடங்களுக்கு சொந்த வேலை காரணமாக சென்று விட, வீட்டில் யாரும் இல்லாத போது இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது.

கைரேகை நிபுணர்கள்,. போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, கொள்ளையர்கலை பிடிக்க தேவகோட்டை காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.