​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

Published : Jan 22, 2021 2:45 PM

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

Jan 22, 2021 2:45 PM

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவனையில் இருந்து வீடு திரும்பினார்.

கடந்த 18ஆம் தேதி சென்னையை அடுத்த போரூர் தனியார் மருத்துவமனையில் காலில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த கமல், தொண்டர்களுக்கு காரில் இருந்தபடியே நன்றி தெரிவித்து விட்டு சென்றார். சில வாரங்கள் ஓய்வுக்குப் பின் தேர்தல் பிரச்சாரத்தின் இரண்டாவது சுற்று பயணத்தை கமல் துவங்க உள்ளார்.