​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"தீ " செயலி அறிமுகம் : 5 விநாடிகளில் தகவல் தெரிவிக்கும் வசதி

Published : Jan 22, 2021 2:44 PM

"தீ " செயலி அறிமுகம் : 5 விநாடிகளில் தகவல் தெரிவிக்கும் வசதி

Jan 22, 2021 2:44 PM

தீயணைப்பு துறையினரின் மீட்பு பணியை துரிதப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ”தீ” செயலியை அனைவரும் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டுமென தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இந்தியாவிலேயே முதன் முறையாக "தீ" என்ற புதிய செயலியை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இதனை மக்கள் தங்களது ஆண்ட்ராய்டு செல்போனியில் இலவசமாக பதிவிரக்கம் செய்து கொள்ளலாம் எனவும், இந்த செயலி மூலம் விபத்து ஏற்பட்ட தகவல் அளித்த 5 விநாடிகளில்  முழு விபரங்கள் தீயணைப்பு துறை கட்டுப்பாட்டு அறையை வந்தடையும் என்றும் தீயணைப்புத்துறை இயக்குநர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.