​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய அணி வென்றதை இளைஞர்கள் வாழ்க்கைப் பாடமாகக் கொள்ள வேண்டும் - பிரதமர் மோடி

Published : Jan 22, 2021 1:38 PM

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய அணி வென்றதை இளைஞர்கள் வாழ்க்கைப் பாடமாகக் கொள்ள வேண்டும் - பிரதமர் மோடி

Jan 22, 2021 1:38 PM

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய அணி பெற்ற வெற்றி இளைஞர்களுக்கான மிகப்பெரிய வாழ்க்கைப் பாடம் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியக் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் முதல் டெஸ்டில் படுதோல்வியடைந்த பின்னும் மீண்டெழுந்து டெஸ்ட் தொடரை வென்றது.

இந்நிலையில் அசாமின் தேஸ்பூர் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் காணொலியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அணி வென்றதை விளையாட்டாக மட்டும் பார்க்கக் கூடாது என்றும், அதை வாழ்க்கைப் பாடமாகக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

நம் திறமையில் நம்பிக்கை கொள்வது, நேர்மறை எண்ணம் கொள்வது, கடினமான வெற்றியைப் பெற முயல்வது ஆகிய பாடங்களை இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

எதிலும் அச்சமின்றித் துணிந்து செயல்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.