​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆன்லைன்வழி கற்பித்தல் முறை மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்ததா என்பதை மதிப்பிட, பள்ளிகளில் இணையவழித் தேர்வு

Published : Jan 22, 2021 1:00 PM

ஆன்லைன்வழி கற்பித்தல் முறை மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்ததா என்பதை மதிப்பிட, பள்ளிகளில் இணையவழித் தேர்வு

Jan 22, 2021 1:00 PM

ஆன்லைன்வழி கற்பித்தல் முறை மாணவர்களுக்கு  பயனுள்ளதாக அமைந்ததா என்பதை மதிப்பிட, பள்ளிகளில் இணையவழித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

12 ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆன்லைன் தேர்வு பள்ளிகளின் கணினி ஆய்வகங்களில் இன்று தொடங்கியது.

ஒரு அமர்வில் 20 மாணவர்கள் வரை அனுமதித்து, உயிரியல் மற்றும் கணினி அறிவியல் பிரிவு  மாணவர்களுக்கு 120 மதிப்பெண்களுக்கும் தொழில் பிரிவு மாணவர்களுக்கு 90 மதிப்பெண்களுக்கும் இரண்டரை மணி நேரம் தேர்வு நடத்தப்படுகிறது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 100 மதிப்பெண்களுக்கு ஆன்லைன் தேர்வு விரைவில் நடத்தப்பட உள்ளது.

தேர்வின் மூலம் பெரும்பான்மையான மாணவர்கள்  பின்தங்கிய பாடப்பகுதியை கண்டறிந்து வகுப்பறையில் மீண்டும் நடத்துவதற்காக பள்ளிக் கல்வித்துறை இந்த ஏற்பாட்டை செய்துள்ளது.