​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதுச்சேரி ஆழ்கடலில் ஒரு டன் பயன்படுத்திய முகக்கவசங்களை சேகரித்த ஆழ்கடல் நீச்சல் வீரர்கள்

Published : Jan 22, 2021 1:00 PM

புதுச்சேரி ஆழ்கடலில் ஒரு டன் பயன்படுத்திய முகக்கவசங்களை சேகரித்த ஆழ்கடல் நீச்சல் வீரர்கள்

Jan 22, 2021 1:00 PM

புதுச்சேரியில் கடலுக்கு அடியில் நிறைந்து கிடக்கும் பயன்படுத்தி தூக்கிவீசப்பட்ட முகக்கவசங்கள், ஆழ்கடல் நீச்சல் வீரர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கின்றன.

ஆழ்கடல் நீச்சல் பயிற்சி அளித்து வரும் “டெம்ப்பிள் அட்வென்ச்சர்” நிறுவனத்தைச் சேர்ந்த வீரர்கள், ஆண்டுதோறும் பயிற்சியின்போது ஆழ்கடலில் தேங்கிக் கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்களையும் அப்புறப்படுத்தி, சுத்தம் செய்து வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கு காலத்தின்போது குப்பைகள் இல்லாமல் கடல் சுத்தமாக இருந்ததை ஏற்கனவே பதிவு செய்துள்ள இந்த வீரர்கள், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் ஒரு டன் அளவிலான முகக்கவசங்களை அப்புறப்படுத்தியுள்ளதாகக் கூறுகின்றனர்.