​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலேயே நிலவும்- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Published : Jan 22, 2021 12:13 PM

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலேயே நிலவும்- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Jan 22, 2021 12:13 PM

மிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலேயே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மட்டும் லேசான மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவும் என கூறப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு காலை நேரங்களில் வடதமிழகத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மற்றும் கடவனுரில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.