​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொரோனாவின் இரண்டாவது அலை பரவலால் சம்பா திருவிழாவை நடத்த வாய்ப்பில்லை - ரியோ டி ஜெனிரோ மேயர் அறிவிப்பு

Published : Jan 22, 2021 11:50 AM

கொரோனாவின் இரண்டாவது அலை பரவலால் சம்பா திருவிழாவை நடத்த வாய்ப்பில்லை - ரியோ டி ஜெனிரோ மேயர் அறிவிப்பு

Jan 22, 2021 11:50 AM

கொரோனா பரவலால் பிரேசிலில் நடப்பாண்டு ஜூலை மாதம் சம்பா நடனத் திருவிழா நடத்த வாய்ப்பில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக புகழ்பெற்ற இத்திருவிழா பிரேசிலில் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். சம்பா கலைஞர்கள் அலங்கார உடைகள் அணிந்து வீதிகளில் நடனமாடி செல்வது பெரும் வரவேற்பை பெற்றது.

ஆனால் பிரேசிலில் கொரோனாவின் 2வது அலை பரவி வருவதாலும், போதிய அளவில் தடுப்பு மருந்து கிடைக்காததாலும், இந்தாண்டு சம்பா திருவிழா நடத்த வாய்ப்பில்லை என ரியோ டி ஜெனிரோவின் மேயர் அறிவித்துள்ளார்.