​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீரம் நிறுவனத்தில் ஒரே நாளில் 2 முறை தீ விபத்து; விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை

Published : Jan 22, 2021 11:43 AM

சீரம் நிறுவனத்தில் ஒரே நாளில் 2 முறை தீ விபத்து; விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை

Jan 22, 2021 11:43 AM

புனேவின் சீரம் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்த நிலையில், மீண்டும் அங்கு தீ விபத்து ஏற்பட்டது.

கோவிஷில்டு கொரோனா தடுப்பூசி தயாரித்து வரும் சீரம் நிறுவனத்தில் நேற்று ஒரே நாளில் இருமுறை தீ விபத்து ஏற்பட்டது.

முதல் முறை ஏற்பட்ட தீ விபத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.

அதனைத் தொடர்ந்து சில மணி நேரத்தில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. 3 மணி நேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை அறியப்படவில்லை.