சென்னையில் நடைபெறும் குடியரசு நாள் விழாவில் பள்ளி கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் இல்லை என்றும், விழாவைக் காண நேரில் வர வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குடியரசு நாளில் சென்னை மெரினா கடற்கரையில் காலை 8 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடியேற்றுவார் எனக் குறிப்பிட்டுள்ளது.
விடுதலைப் போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் பொன்னாடை போர்த்தி உரிய மரியாதை செய்ய அறிவுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
குடியரசு நாள் நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.