​​ அபுதாபி லாட்டரியில் இந்தியருக்கு 18.22கோடி ரூபாய் பரிசு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அபுதாபி லாட்டரியில் இந்தியருக்கு 18.22கோடி ரூபாய் பரிசு

அபுதாபி லாட்டரியில் இந்தியருக்கு 18.22கோடி ரூபாய் பரிசு

Jun 03, 2018 10:11 PM

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியர் ஒருவருக்கு லாட்டரிச் சீட்டில் 18கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.

நைஜீரியாவில் பணியாற்றிவரும் கேரளத்தைச் சேர்ந்த டிக்சன் கட்டித்தரா ஆபிரகாம் என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி விமான நிலையத்தில் பிக் டிக்கட் என்கிற லாட்டரிச் சீட்டை வாங்கியுள்ளார். விமான நிலையத்தில் நடைபெற்ற குலுக்கலில் அவருக்கு ஒரு கோடி திராம் பரிசு விழுந்துள்ளது.

இதன் இந்திய மதிப்பு 18கோடியே 22லட்ச ரூபாய் ஆகும். இதேபோல் அவரைத் தவிர இந்தியர் 5பேருக்கும் லாட்டரியில் பரிசுகள் விழுந்துள்ளன. லேண்ட்ரோவர் காரும் இந்தியரான ராகவன் சுதர்சனனுக்குப் பரிசாகக் கிடைத்துள்ளது.

இந்தத் தகவல்களை அபுதாபியில் இருந்து வெளியாகும் கலீஜ் டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.