​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உலகின் வேறெந்த நாட்டவரையும் விட இந்தியர்களே பிற நாடுகளில் அதிகம் வாழ்ந்து வருவதாக ஐ.நா. அமைப்பு தகவல்

Published : Jan 16, 2021 4:51 PM

உலகின் வேறெந்த நாட்டவரையும் விட இந்தியர்களே பிற நாடுகளில் அதிகம் வாழ்ந்து வருவதாக ஐ.நா. அமைப்பு தகவல்

Jan 16, 2021 4:51 PM

உலகின் வேறெந்த நாட்டவரையும் விட இந்தியர்கள் ஒருகோடியே 80 லட்சம் பேர் பிற நாடுகளில் வாழ்ந்து வருவதாக ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐ.நா. பொருளாதார சமூக விவகாரங்களுக்கான துறை தாய்நாட்டைவிட்டுப் பிற நாடுகளில் வாழ்ந்து வருவோரின் புள்ளி விவரங்களைத் திரட்டியுள்ளது. அதில் இந்தியர்கள் ஒரு கோடியே 80 லட்சம் பேர் உலகின் பிற நாடுகளில் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

புலம்பெயர்ந்த இந்தியர்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் 35 லட்சம் பேரும், அமெரிக்காவில் 27 லட்சம் பேரும், சவூதி அரேபியாவில் 25 லட்சம் பேரும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தியருக்கு அடுத்தபடியாக மெக்சிகோ நாட்டவர் ஒரு கோடியே பத்து லட்சம் பேரும், ரஷ்ய நாட்டவர் ஒரு கோடியே பத்து லட்சம் பேரும் வெளிநாடுகளில் உள்ளனர். சீனர்கள் ஒரு கோடிப் பேரும், சிரியர்கள் 80 லட்சம் பேரும் வெளிநாடுகளில் உள்ளனர்.