​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மு.க.முத்துவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடக் கோரி மனு - சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Published : Mar 01, 2018 8:04 PM



மு.க.முத்துவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடக் கோரி மனு - சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Mar 01, 2018 8:04 PM

மு.க.முத்துவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடக் கோரும் ஆட்கொணர்வு மனுவுக்கு சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஷீபா ராணி என்பவரின் மனுவில் தனது தந்தை மு.க.முத்துவுடன் வசித்து வந்த தன்னையும், தனது தாயையும் அவரது மூத்த மனைவியின் மகன் அறிவுநிதி ரவுடிகளுடன் வந்து அடித்துப்போட்டு தங்கள் வீட்டை அபகரித்துக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். தந்தையை சந்திக்கவிடாமல் அறிவுநிதி தடுத்து வருவதால் சிரமப்பட்டு வருவதாகவும், இது குறித்து கோட்டூர்புரம் போலீசில் புகார் அளித்தும் பலன் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மு.க.முத்து, அறிவுநிதியிடம் சட்டவிரோத காவலில் இருப்பதாகவும், அவரை மீட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிடுமாறும் அவர் கோரியுள்ளார். மனுவை விசாரித்த நீதிபதிகள், சென்னை காவல்துறை ஆணையர், கோட்டூர்புரம் காவல் ஆய்வாளர் ஆகியோர் 2 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.