​​ இளையராஜாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழில் பிறந்த நாள் வாழ்த்து
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இளையராஜாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழில் பிறந்த நாள் வாழ்த்து


இளையராஜாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழில் பிறந்த நாள் வாழ்த்து

Jun 02, 2018 2:29 PM

இசைஞானி இளையராஜாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இன்னிசைத் துடிப்பைத் தீர்மானிக்கும், ஒப்பற்ற கலைஞர், இசை மாமேதை, தன்னேரில்லா இளையராஜாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என தமது ட்விட்டர் பக்கத்தில் குடியரசுத் தலைவர் பதிவிட்டுள்ளார். இவ்வாண்டுத் தொடக்கத்தில்,இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கியதை தான் பெற்ற  பெரும்பேறாகக் கருதுகிறேன் எனவும் இளையராஜாவுக்கு ராம்நாத் கோவிந்த் புகழாரம் சூட்டியுள்ளார். இதே வாழ்த்தை இந்தி, ஆங்கிலத்திலும் ராம்நாத் கோவிந்த் பதிவிட்டுள்ளார்.