​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியா கடற்படைக்கு வலிமை சேர்க்க தயாராகும் ரோமியோ ஹெலிகாப்டரின் முதல் புகைப்படத்தை வெளியிட்டது அமெரிக்க நிறுவனம்

Published : Dec 04, 2020 5:04 PM

இந்தியா கடற்படைக்கு வலிமை சேர்க்க தயாராகும் ரோமியோ ஹெலிகாப்டரின் முதல் புகைப்படத்தை வெளியிட்டது அமெரிக்க நிறுவனம்

Dec 04, 2020 5:04 PM

இந்திய கடற்படைக்காக தயாரித்து வரும் எம்எச் 60 ரோமியோ ஹெலிகாப்டரின் முதல் புகைப்படத்தை, அமெரிக்க நிறுவனமான லாக்ஹீட் மார்டின் வெளியிட்டுள்ளது.

இந்திய கடற்படைக்காக மொத்தம் 24 ஹெலிகாப்டர்களை 18 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பில் வாங்க அமெரிக்காவுடன் 2018ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

2 ஆண்டுகளில் இந்தியாவிடம் ஹெலிகாப்டர்களை ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்திய கடற்படையின் பிரத்யேக வண்ணத்துடன் அதன் முதல் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

பல்முனை பயன்பாடு வசதி கொண்ட எம்எச் 60 ரோமியோ ஹெலிகாப்டர், நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.